Items related to Veda Rishikalin Kavithai (Tamil Edition)

Veda Rishikalin Kavithai (Tamil Edition) - Softcover

Bharati, C Subramania

 
9788118040972: Veda Rishikalin Kavithai (Tamil Edition)

Synopsis

பாரதியார் பத்திரிகை வாயிலாக எழுதிய வியாஸங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. வேதரிஷிகளின் கவிதையை விளக்குவனவான சில ஸூக்தங்களை மொழி பெயர்த்து அவற்றிற்கு முன்னுரைகளும் விளக்கங்களும் எழுதியுள்ளார். வேத ஸூக்தங்களின் உள்ளுறை பொருளாக ஸ்ரீ பாரதியார் கொண்ட கருத்துக்களை இவை நன்கு விளக்குவன. வேத ஞானத்திலே இவருக்கு இருந்த பெருமதிப்பின் காரணமாக, இவர் ஆங்கிலத்தில் எழுதிய பாடல்களை 'அக்னியும் இதர பாடல்களும்' (Agni and other Poems) என்ற தலைப்புடைய தனி நூலாகப் பதிப்பித்திருக்கிறோம். அந் நூலினையும் இதனையும் படிப்போர்க்கு ஸ்ரீ பாரதியாரின் பாடல்கள் எவ்வளவிலே வேத ரிஷிகளின் கவிதையை அனுசரித்து எழுந்தன என்பது தெளிவாகும்.

ஸ்ரீ காசியில் ஹிந்து ஸர்வகலா சங்கத்திற்கு அஸ்திவாரக் கல் நாட்டிய போது, பல வித்வான்கள் வந்து உபந்யாஸம் செய்தார்கள். இவற்றுள்ளே, நவீன சாஸ்திர (ஸயன்ஸ்) பண்டிதர்களின் சிகாமணியாக விளங்கும் ஸ்ரீமான் ஜகதீச சந்திர வஸு செய்த உபந்யாஸம் மிகவும் மாண்புடையது.

'லௌகிக சாஸ்திர ஆராய்ச்சிகளிலே மறுபடியும் பாரத தேசம் தலைமை வகிக்கும்படி செய்வது நம்முடைய கடமை' என்பதை இவர் பல வகையிலே விளக்கிய பின்பு, தமது முடிவுரையில் பின்வருமாறு சொல்லுகிறார் -

'ஹிந்து நாகரிகத்திற்குள்ளே ஒரு விசேஷ சக்தியிருக்கிறது. காலத்தின் அழிவுகளையெல்லாம், உலகத்திலேயுள்ள பொருளனைத்தையும் சிதைவுபடுத்த வரும் மாறுதல்களையெல்லாம், இந்த சக்தியினாலே நமது நாகரிகம் எதிர்க்க வல்லதாயிற்று.

"synopsis" may belong to another edition of this title.