Creativity and Problem Solving: The Brian Tracy Success Library (Tamil Edition) - Softcover

Brian Tracy

 
9789355439369: Creativity and Problem Solving: The Brian Tracy Success Library (Tamil Edition)

Synopsis

வேலைச் சூழல்களில் தோன்றுகின்ற சவால்களுக்குப் படைப்பாற்றல்ரீதியான தீர்வுகளைக் கண்டுபிடிக்கின்ற திறமைதான் ஓர் அசாதாரணமான தொழில் வாழ்க்கைக்கான முத்திரையாகும். உங்களுடைய வேலையில் நீங்கள் முன்னேறுவதற்குப் படைப்பாற்றல்ரீதியாகச் சிந்திக்கின்ற திறன் இன்றியமையாதது. உலகின் தலைசிறந்த வெற்றியாளர்களில் ஒருவரான பிரையன் டிரேசி, உதவிகரமான கருவிகள் கிடைத்தால் எவரொருவராலும் படைப்பாற்றலை மேலும் வளர்த்துக் கொள்ள முடியும் என்று கருதுகிறார். படைப்பாற்றல்மிக்க யோசனைகளை ஊற்றெடுக்க வைக்கின்ற 21 நிரூபணமான உத்திகளை பிரையன் இந்நூலில் வெளிப்படுத்துகிறார். இந்நூலிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய முக்கியமான விஷயங்களில் கீழ்க்கண்டவையும் அடங்கும்: • படைப்பாற்றலைத் தூண்டுகின்ற மூன்று காரணிகளை முடுக்கிவிடுவது எப்படி • உங்களுடைய ஊழியர்கள் தங்களிடம் படைப்பாற்றல் மனப்போக்கை உருவாக்கிக் கொள்ள உங்களால் எப்படி உதவ முடியும் • நேர்த்தியான தீர்வுகளை உருவாக்குவதற்கு எந்த மாதிரியான கேள்விகளைக் கேட்க வேண்டும் • இயந்திரத்தனமான சிந்தனைக்கும் மறைமுகப் படைப்பாற்றல் சிந்தனைக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் என்னென்ன • படைப்பாற்றல் தூண்டுதலை அடக்கிவிடாமல் புதிய யோசனைகளைத் தீவிரமாக மதிப்பிடுவது எப்படி உங்களுக்குள் பொதிந்திருக்கும் உள்ளுணர்வுரீதியான மேதைமையை வெளிக் கொண்டுவர, உங்களுடைய தொழில் வாழ்க்கையைப் புரட்டிப் போடக்கூடிய இந்நூலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

"synopsis" may belong to another edition of this title.